சூடுபிடிக்கும் கர்நாடக தேர்தல் களம் ...! முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல்...!

சூடுபிடிக்கும் கர்நாடக தேர்தல் களம் ...! முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல்...!

கர்நாடக ,மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தல் வருகிற மே மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. அதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்று கட்டமாக  வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டது. பாஜக சார்பில் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட பல்வேறு தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அவ்வகையில், கனக்புரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார்  வேட்புமனு தாக்கல் செய்தார். 
 

அதேபோல், யஷ்வந்த்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கர்நாடக அமைச்சர் எஸ்.டி. சோமசேகர் கவுடாவும்,  சன்னபட்னா சட்டப்பேரவைத் தொகுதியில் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடி(எஸ்) தலைவருமான குமாரசாமியும், கலபுர்கி தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக தத்தாத்ராய பாட்டீலும், மல்லேஸ்வரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக கர்நாடக அமைச்சர் சிஎன் அஸ்வத்நாராயணனும், குல்பர்கா வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக சந்திரகாந்த் பாட்டீலும், காந்தி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தினேஷ் குண்டுராவ்வும், ராமநகரா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், சித்தபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிக்க | பாஜக மீதான அதிருப்தியில்... காங்கிரசில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்...!

வருகிற மே மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் ஏப்ரல் 20-ம் தேதி  வரை மட்டுமே கால அவகாசம் இருப்பதால், அடுத்தடுத்து பல அமைச்சர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஏற்கனவே கர்நாடக அரசியல் களம் பரபரப்பாக இருந்து வரும் சூழலில், இன்று வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய தொடங்கியிருப்பதால் தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது.

 இதையும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு...புதிய ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்...!