இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 8 தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்த தலிபான்கள்...

இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 8 தீவிரவாதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளதால் அவர்கள் இந்தியாவில் நுழைய வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை மத்திய அரசு அதிகப்படுத்தியுள்ளது.

இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 8 தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்த தலிபான்கள்...

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டின் பெயரை 20 ஆண்டுகளுக்கு முன்பு அழைக்கப்பட்டது போன்று ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என மாற்றியுள்ளனர். நாட்டின் புதிய அதிபராக முல்லா அப்துல் கனி பராதர் அறிவிக்கப்பட்டுள்ளார். காபூலில் உள்ள பெரும்பாலான சோதனைச் சாவடிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தலிபான்கள் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஆப்கானை கைப்பற்றிய பின்னர் புல்-இ-சர்கி மற்றும் பதம் பாக் உள்ளிட்ட  இரண்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளையும் தாலிபான்கள் விடுதலை செய்துள்ளனர். அதில் கேரளாவைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த ஆண்டு மார்ச் மாதம் காபூல் குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதலில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.  தாக்குதலுக்கு தொடர்புடைய  தீவிரவாதியான அய்ஜாஸ் அகங்காரும், தாலிபனால் விடுவிக்கப்பட்டுள்ளான். அய்ஜாஸை விசாரிக்க NIA அமைப்பினர் கடந்த ஆண்டு ஆப்கான் செல்லவிருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விடுவிக்கப்பட இவர்கள் மற்ற நாடுகள் வழியே இந்தியாவிற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கபடுவதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.