ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்: அதிபர் அஷ்ரப் கனி பதவியை  ராஜினாமா செய்துள்ளதாக தகவல்...

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் பிடிக்குள் சென்ற நிலையில் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளதாகவும் புதிய அதிபராக தலிபான் காமண்டர் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்: அதிபர் அஷ்ரப் கனி பதவியை  ராஜினாமா செய்துள்ளதாக தகவல்...

கடந்த 20 ஆண்டுகளான ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது படைகளை அமெரிக்கா முழுமையாக வாபஸ் பெற்றுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்கப் படைகள் முற்றிலும் வெளியேறிவிட்ட நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரங்களைப் படிப்படியாக தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 

அண்மையில் இந்தியர்கள் அதிகமாக வசித்து வரும் மசார் இ ஷரீப் நகரையும் அவர்கள் கைப்பற்றினர். இன்று ஜாலாலாபாத்தை கைப்பற்றிய அவர், அங்குள்ள முக்கிய சாலை வழியாக தலைநகர் காபூலுக்குள் நுழைந்துள்ளனர். இதனிடையே தூதரகங்கள் நிறைந்த பகுதியான காபூலில் இருந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் அவசர அவசரமாக மக்களை  வெளியேற்றி வருகின்றன. எனினும் காபூலில் தாக்குதல் நிகழ்த்தப்படாது எனவும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காபூலில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில்  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் புதிய அதிபராக தலிபான் காமண்டர் முல்லா அப்துல் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன