பொதுநலன் கருதியே பிரதமரின் படம்... மத்திய அரசு விளக்கம்...

பொது நலன் கருதியே கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் அச்சிடப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

பொதுநலன் கருதியே பிரதமரின் படம்... மத்திய அரசு விளக்கம்...

சுய விளம்பரத்திற்காகவே தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் அச்சிடப்படுவதாகவும், மக்களுக்கு தடுப்பூசி வழங்கு பணியின் மாநிலங்களின் முயற்சிகளுக்கான பலனை மத்திய அரசு தட்டிபறிப்பதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் நீக்கப்பட்டுவிட்டதாக சுட்டிக்காட்டிய எதிர்கட்சிகள், தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தை அச்சிட வேண்டியது அவசியமா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், பொது நலன் கருதியே தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் அச்சிடப்படுவதாக விளக்கமளித்தார்.