ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த நபரை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைத்த போலீஸ்..!!

ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த நபரை போலீஸ் அதிகாரி காலால் எட்டி உதைத்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த நபரை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைத்த போலீஸ்..!!

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில், கர்நாடகவின் மங்களூருவில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு தினமும் மாவெளி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக  ரெயில்வே அதிகாரி, ரெயில்வே போலீஸ், கேரள போலீஸ் என 3 பேர் கொண்ட குழு கன்னூர் ரெயில் நிலையத்தில் வைத்து மாவெளி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளனர்.

அப்போது ஒவ்வொரு பயணிகளிடமும் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது ஒரு நபரிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி போலீஸ் அதிகாரி கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர் தனது டிக்கெட்டை காண்பிக்காததால் அந்த நபர் டிக்கெட் எடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டனர். மேலும் அந்த நபர் மதுபோதையில் இருந்துள்ளார்.

டிக்கெட் எடுக்காமல் மதுபோதையில் ரெயிலில் பயணம் செய்ததால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த நபரை தனது காலால் எட்டி உதைத்தார். இதில், அந்த நபர் சரிந்து கீழே விழுந்துள்ளார்.  இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக பயணிகள் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலானது.

இதனையடுத்து, ரெயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த நபரை தனது காலால் எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வந்தனர்.

அதனடிப்படையில், ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த நபரை காலால் உதைத்த கேரள போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து  அந்த போலீஸ் அதிகாரியுடன் சென்ற ரெயில்வே அதிகாரி, ரெயில்வே போலீஸ் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.