நாடு முழுவதும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது...

நாடு முழுவதும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது...

நாடு முழுவதும் இதுவரை 11 ஆயிரத்து 717 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் நோய், புதிய மருத்துவ சவாலாக உருவெடுத்துள்ளது. கொரோனா தொற்று பாதித்த நபர்களை குறிவைத்து தாக்கும் இந்த நோயை பெருந்தொற்றாக கருதி நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 859 பேரும், மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்து 770 பேரும், ஆந்திராவில் 768 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் 29 ஆயிரத்து 250 குப்பி ஆம்ஃபோடெரிசின் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து மருந்துகள் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 236 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.