நடிகர் சித்தார்த்தின் சர்ச்சை பதிவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கண்டனம்.!!

பேட்மிண்டன் வீராங்கனை பற்றிய நடிகர் சித்தார்த்தின் சர்ச்சை பதிவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

 பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி பிரச்னை குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வாலை விமர்சித்தும், அவரை மறைமுகமாக கொச்சைப்படுத்தியும் நடிகர் சித்தார்த் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூவும்   நடிகர் சித்தார்த்தின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில் விளையாட்டு துறையில் சாய்னாவின் பங்களிப்பை கண்டு இந்தியா பெருமை கொள்வதாக   குறிப்பிட்ட அவர், தேசபற்று மிக்க அத்தகைய பிரபலத்தை மோசமான கருத்து மூலம்  விமர்சித்திருப்பது சித்தார்த்தின் இழிவான மனநிலையை காண்பிப்பதாக சாடியுள்ளார்.