பெரும் பதற்றத்துக்கு இடையே உக்ரைனில் தவித்த 22,500 இந்தியர்களை மீட்டுள்ளோம் - ஆபரேஷன் கங்கா திட்டம் பற்றி மத்திய அமைச்சர் பேச்சு

பெரும் பதற்றத்துக்கு இடையே, உக்ரைனில் தவித்த 22 ஆயிரத்து 500 பேரை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பெரும் பதற்றத்துக்கு இடையே உக்ரைனில் தவித்த 22,500 இந்தியர்களை மீட்டுள்ளோம்  - ஆபரேஷன் கங்கா திட்டம் பற்றி மத்திய அமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் உக்ரைன் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

இந்த நிலையில் 2வது நாளான இன்று, மாநிலங்களவையில் மத்திய அரசின் கங்கா ஆபரேஷன் பற்றி அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாக விளக்கினார்.  அப்போது, ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அதிகரித்ததும்,  உக்ரைனில் உள்ள இந்தியர்களை கணக்கெடுக்கும் பணியை அங்குள்ள இந்திய தூதரகம் தொடங்கியதாக தெரிவித்தார்.

அதன்படி 20 ஆயிரம் இந்தியர்கள் அங்கிருப்பது தெரியவந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் எனவும் குறிப்பிட்டார். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மத்திய அரசு முயற்சி எடுத்தும்,  கிட்டதட்ட 18 ஆயிரம் பேர் நாடு திரும்ப முன்வரவில்லை என குறை கூறிய அவர், பெரும் கடின போராட்டத்திற்கு மத்தியில் 22500  பேர் பத்திரமாக  மீட்டு வந்ததாகவும் தெரிவித்தார். 

இந்த மீட்பு பணியின் போது, உக்ரைன் மக்களையும் போலந்து எல்லைக்கு கொண்டு விட்டதாகவும், ஜெய்சங;கர் கூறினார். முன்னதாக, ஜெய்சங்கர் உரையை துவங்கியபோது, உரை சார்ந்த அறிக்கை வழங்கப்படவில்லை என கூறி எதிர்கட்சியினர் 10 நிமிடம் அவை நடவடிக்கையை நிறுத்தி வைக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.