கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்?

கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அம்மாநில பாஜக தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்?

குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு  நான்காவது முறையாக கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். இந்த நிலையில் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நேற்றைய தினம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  அரவிந்த் பெல்லத், பசவராஜ் பொம்மை மற்றும் முருகேஷ் நிரானி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்நிலையில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கர்நாடக மாநில பாஜக தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள்  ஆலோசனை கூட்டம் பெங்களுரில் நடைபெற்று வருகிறது.  இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் மற்றும் கிஷண் ரெட்டி  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.