7 ஆண்டு கால ஆட்சியில் நாடு மிக வேகமாக முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது: பிரதமர் மோடி

7 ஆண்டு கால ஆட்சியில் நாடு மிக வேகமாக முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது:  பிரதமர் மோடி

கொரோனா தொற்றுக்கு எதிராக முழு சக்தியுடன் இந்தியா போராடி வருவதாகவும், அதற்கு மத்தியில் பல்வேறு இயற்கை பேரிடர்களை நாம் எதிர்கொண்டுள்ளதாகவும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.


77-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த 10 நாட்களில் நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் இரண்டு பெரிய சூறாவளி புயல் தாக்கியதாக குறிப்பிட்டார்.

இயற்கை பேரிடர்களின் போது, புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மக்கள் தைரியத்தை காட்டினர் என்றும், அவர்கள் பொறுமை மற்றும் ஒழுக்கத்துடன் போராடியதாகவும் கூறியுள்ள பிரதமர் மோடி,இயற்கை பேரிடர்களின் போது, இதற்கு முன்பை விட தற்போது ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடிந்ததாக தெரிவித்தார்.

புயல் மற்றும் மழை காலங்களில் துணிச்சலோடு மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி,கொரோனா 2-வது அலையில் தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது என்றும், அதில் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் சவாலை எதிர்கொள்ள டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் விமானப்படையினர் பெருமளவில் உதவியாக இருந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர்,நாட்டில் தற்போது ஒரே நாளில் 30 லட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்யும் அளவுக்கு நமது திறன் அதிகரித்துள்ளது என்றும்,நாட்டில் இதுவரை 33 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.