ஆசிய கபடிப் போட்டி; இந்திய அணி வெற்றி!

ஆசிய கபடிப் போட்டி; இந்திய அணி வெற்றி!

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி எட்டாவது முறையாக பட்டத்தை வென்றது இந்தியா. 

கொரிய குடியரசின் பூசானில் உள்ள டோங்-ஈயாய் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சியோக்டாங் கலாச்சார மையத்தில் நடந்த ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் இந்தியா 42-32 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது. இதுவரை நடந்துள்ள ஒன்பது பதிப்புகளில் இது இந்தியாவின் எட்டாவது பட்டமாகும். 

பூசானில் நடந்த போட்டியின் தொடக்க ஐந்து நிமிடங்களில், இந்திய ஆண்கள் கபடி அணி ஈரானிடம் தோல்வியடைந்தது. இருப்பினும், ஆட்டத்தின் 10வது நிமிடத்தில், பவன் செஹ்ராவத் மற்றும் அஸ்லாம் இனாம்தார் ஆகியோரின் தற்காப்பு மற்றும் வெற்றிகரமான ரெய்டுகளால் சில டிபன்ஸ் புள்ளிகளுக்குப் பிறகு ஈரான் ஆல்-அவுட் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு எதிராக ஈரான் சில எளிதான போனஸ் புள்ளிகளைப் பெற்றது, ஆனால் 19 வது நிமிடத்தில் இந்தியா ஈரானிடம் இரண்டாவது முறையாக ஆல்-அவுட்டானது. இரண்டாவது பாதியில் இந்தியா 23-11 என்ற புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றது. இருப்பினும், 29வது நிமிடத்தில் இரண்டு புள்ளிகள் கொண்ட ரெய்டு மற்றும் ஒரு சூப்பர் ரெய்டு மூலம் இந்தியாவுக்கு முதல் ஆல்-அவுட்டை ஏற்படுத்த ஈரான் கேப்டன் முகமதுரேசா ஷட்லூயி சியானே உதவினார்.  

இரண்டு நிமிடங்கள் மீதமிருந்த நிலையில், ஈரான் 38-31 என முன்னிலையைக் குறைத்தது. இதனால் ஆட்டம் பதட்டமாக மாறியது. ஆனால் இந்தியா 42-32 என்ற கணக்கில் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக, இந்திய அணி 64-20 என்ற புள்ளி கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்த லீக் சுற்றில் தோல்வியின்றி முன்னேறி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்" முதலமைச்சர் பதில் கடிதம்!