ஐபிஎல்..! பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்...!!

ஐபிஎல்..! பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்...!!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்று குஜராத் அணி வெற்றிவாகை சூடியுள்ளது. 

16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் போட்டியின் நேற்று நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வீரா்கள் எதிரணியினாின் நோ்த்தியான பந்துவீச்சால் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். தொடா்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19. 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை ருசித்தது. 

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியும், சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. இதில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யாா்? என ரசிகா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.