டி-20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… தோனிக்கு பொறுப்பு வழங்கிய பி.சி.சி.ஐ  

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு ஆலோசகர் பொறுப்பையும் பிசிசிஐ வழங்கியுள்ளது.

வீராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிசப் பந்த், இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளனர். இதேபோல்  ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது சமி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாகர் ஆகியோரைக்  காத்திருப்பு வீரர்களாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இந்திய டி20 அணிக்கு மகேந்திர சிங் தோனி ஆலோசகராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. இந்திய அணி அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.