சென்னையில் 'ஸ்குவாஷ் உலககோப்பை -2023' இன்று தொடக்கம்!

சென்னையில் 'ஸ்குவாஷ் உலககோப்பை -2023' இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023 போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வணிக வளாகத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் ஸ்குவாஷ் உலக கோப்பை - 2023 இன்று தொடங்க உள்ளது. வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் 8 நாடுகளைச் சேர்ந்த 32 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.Image

ஸ்குவாஷ் உலககோப்பை -2023 போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சி போட்டி நடைபெற உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வணிக வளாகத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்-செயலர் மெகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Image

இந்நிகழ்ச்சியில் ஸ்குவாஷ் உலககோப்பை போட்டியை தொடங்கி வைக்கும் விதமாக ஸ்குவாஷ் உலககோப்பை -2023 போட்டிக்கான கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய இசை கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதன் பின்னர், இந்திய வீராங்கணை ஜோஷ்னா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கணை ஜெசிகாவுடன் பயிற்சி ஆட்டமாக சிறிது நேரம் ஆடினார். Image

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் ஸ்குவாஷ் உலககோப்பை நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் விளையாடி உள்ளனர். ஸ்குவாஷ் விளையாட்டில் ஆர்வம் உள்ள பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.Image

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ஸ்குவாஷ் விளையாட்டை நிறைய மாணவர்கள் கற்றுக் கொண்டு வருகின்றனர். ஸ்குவாஷ் போட்டியைக்காண ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்து வருவோம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க' மல்யுத்த வீரர்கள் ' வழக்கு: ஜூலை 4-ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்...!: