ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு...திட்டத்தை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு...திட்டத்தை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

'நான் முதல்வன்' திட்டத்தின் திறன் மேம்பாடு மற்றும் இணையதளப் பயன்பாட்டை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

இணையப் பயன்பாடு:

கல்வி பாடத்திட்டங்கள், பயிற்சிகள், திட்டத்துக்கான செயல்முறைகள் உள்ளிட்டவற்றை, மாணவர்கள் அறிந்துகொள்ள ’நான் முதல்வன்’ திட்டத்தின் திறன் மேம்பாடு மற்றும் இணையப் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

முதலமைச்சர் உரை:

இவ்விழாவில் பேசிய முதலமைச்சர், தாழ்வு மனப்பான்மையால் பன்னாட்டு நிறுவனங்களில் மாணவர்கள் வேலைக்குச் செல்வது தடைபடாத வண்ணம், ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தார். பொறியியல், மருத்துவத்தை நோக்கி ஓடும் மாணவர்கள் பல்துறைசார் படிப்புகள் தொடர்பாகவும் அறிந்திருக்க வேண்டும் எனவும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/entertainment/It-is-reported-that-actor-Syan-Vikram-will-make-an-entry-in-Kannada-too

மாணவர்களுக்கு பயிற்சி:

இதில் கலந்துகொண்டு பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, பன்மொழிப்பன்மை, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளுதல், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், தொழில் முனைவோராதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு:

அதேபோன்று, நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி கணேசன் பேசுகையில், நான் முதல்வன் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 10 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற உள்ளதாக குறிப்பிட்டார்.