சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது கிருத்திகா படுகாயம் - தனிப்பட்ட முறையில் தேவையான உதவிகள் வழங்கப்படும் - மா.சு

சென்னை சைதாப்பேட்டையில் இரண்டு தினங்களுக்கு முன் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தம்பத்யினர் படுகாயம் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது கிருத்திகா படுகாயம் -  தனிப்பட்ட முறையில் தேவையான உதவிகள் வழங்கப்படும் - மா.சு

சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதியினர் படுகாயம்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கேசவவேல் மற்றும் லட்சுமி என்ற தம்பதி படுகாயம் அடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 மேலும் படிக்க| கோவில் அனைவருக்கும் சமமானது - அமைச்சர் சேகர்பாபு பேச்சு

 அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில் ....

சைதாப்பேட்டை ஆட்டு தொட்டி அருகே கட்டடம் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை, அவரது அம்மா கடுமையான காயம் ஏற்பட்டு பாதிப்பு.  நெருப்பு மேட்டை சேர்ந்தவர் கேசவேல் 38, இவர் ஒரு மாற்றுத்திறனாளி, சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டு அருகே புதிய இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் சுவர் இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழையால் இடிந்து இவரது வீட்டின் மீது விழுந்துள்ளது.

மூன்று வயது கிருத்திகா படுகாயம்

இதில் மூன்று வயது கிருத்திகா படுகாயம் அடைந்துள்ளார். கேசவ வேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது, தற்பொழுது சுயநினைவுடன் உள்ளார். லட்சுமி 6 மாத குழந்தையை காப்பாற்ற கட்டியணைத்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கேசவவேல் மற்றும் லட்சுமி ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றரை வயது குழந்தை கிருத்திகா எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனிப்பட்ட முறையில் உதவிகள் :  தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் எனவும், இந்த விபத்து குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் மற்றும் தனிப்பட்ட முறையில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.