மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஊர்க்கலவரத்தில் முடிந்ததால் போலீசார் குவிப்பு!

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஊர்க்கலவரத்தில் முடிந்ததால் போலீசார் குவிப்பு!

பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு ஊர்க்கலவரம் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மாணவர்களிடையே தகராறு:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் விளையாடும்போது இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்ட ஆசிரியர்கள் உடனடியாக  மாணவர்களை விலக்கிவிட்டு அனுப்பி வைத்தனர். 

மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு ஊர்க்கலவரத்தில் முடிந்தது:  

அதன்பிறகு மாணவர்களின் மோதல் பற்றி அறிந்த வேலங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஆயுதங்களுடன் கயப்பாக்கம் கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கினர். இதனால் இரண்டு கிராமத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விசிக கொடிக்கம்பம் உடைக்கப்பட்டதுடன் சிலர் காயமடைந்தனர். 

காவலர்கள் குவிப்பு:

இதையடுத்து தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை காவல்துறையினர்,  இரு கிராமத்தைச் சேர்ந்த 6 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.