வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர்...!

வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர்...!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றியதை அடுத்து, வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் வழங்கினார்.

மூவர்ண கொடியை ஏற்றிய ஆளுநர் :

நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை மெரினா உழைப்பாளர் சிலையருகே குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, பி.டி.ஆர் பழனிவேல், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள்  கலந்துகொண்டனர். 

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில்  மூவர்ணக்கொடியை ஏற்றி  ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிக்க : 74வது குடியரசு தின விழா: மூவர்ண கொடியேற்றிய தமிழ்நாடு ஆளுநர்...!

அதை தொடர்ந்து முப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்று கொண்டார்.
சென்னை பெருநகர காவல் கூட்டுக்குழல் முரசிசை அணிவகுப்பு மற்றும் ஊர்க்காவல் படைப் பெண்கள் பிரிவினர் அணிவகுப்பும் இடம்பெற்றது.

அண்ணா பதக்கங்களை வழங்கிய முதலமைச்சர் :

தொடர்ந்து வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கங்கள், தலைமைக் காவலர் சரவணன், செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு உள்ளிட்ட 5 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு  காவல் ஆய்வாளர், ஜெயமோகனுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சிறந்த காவல்நிலையத்திற்கான முதலமைச்சர் விருதுகளும் வழங்கப்பட்டன.