"தமிழ்நாட்டில் கள்ளுக்கடை புறக்கணிப்படுகிறது" அண்ணாமலை!!

"தமிழ்நாட்டில் கள்ளுக்கடை புறக்கணிப்படுகிறது" அண்ணாமலை!!

திமுக பிரமுகர்களின் மது ஆலைக்கு அதிக வருமானம் வருவதால் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை புறக்கணிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

"என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் பேசுகையில், ‘‘மத்திய அரசு தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில், 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. ஜனவரியில் யாத்திரை முடியும்போது மக்களவை தேர்தலில் பா.ஜ.க,வுக்கு மக்கள் 40 தொகுதியிலும் வெற்றியை தருவார்கள். அதிகமாக கடன் வாங்கிய மாநிலத்தில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அடுத்தாண்டு 80 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளது. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ள நிலையில், ஒரு குடும்பத்திற்கு ரூ.1000 வழங்க போகிறது இந்த அரசு" எனச் சாடியுள்ளார்.

மேலும், "5500 டாஸ்மாக் கடைகள் மூலம், 44 ஆயிரம் கோடி, தமிழகத்திற்கு வருமானமாக வருகிறது. திமுக பிரமுகர்களின் சாராய ஆலைக்கு அதிக வருமானம் செல்வத்தால், தமிழக்தில் கள்ளுக்கடை புறக்கணிக்கப்படுகிறது" எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க || மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூாி!!