கலைஞர் நூற்றாண்டு விழா: சிறப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!

கலைஞர் நூற்றாண்டு விழா: சிறப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சருடன், அமைச்சர்கள் துரைமுருகன்  உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா தொடங்கியுள்ள நிலையில், ஓராண்டு காலம் அந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க : U-20 தடகளம்: பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்!

இந்த நிலையில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக குழுவினர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் ஆ ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.