குற்றாலம் அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை...!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை பெய்வது வழக்கம். இந்த சூழலை அனுபவிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவர்.

இதையும் படிக்க : அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு... அதிகாலை முதல் அதிரடி சோதனை!

அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்புவரை அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், 2 வது நாளாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்..