தமிழகம் மற்றும் கேரளாவில் 5 பேரை கொன்ற காட்டு யானை சங்கரை சாதுவாக்கிய பாகன்...

தமிழகம், கேரளா என இரு மாநிலங்களை களங்கடித்த காட்டு யானை சங்கர், 141 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்பு பாகன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் 5 பேரை கொன்ற காட்டு யானை சங்கரை சாதுவாக்கிய பாகன்...

கடந்த ஜனவரி மாதம் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்குள் புகுந்த காட்டுயானை பயிர்களை சேதப்படுத்தியதோடு, தந்தை-மகன் உட்பட 3 பேரை அடுத்தடுத்து தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அந்த யானையின் பெயர் சுல்லி கொம்பன் சங்கர் என்பதும், கேரளாவில் இதேபோல் 2 பேரை தாக்கி கொலை செய்ததையும் கண்டுபிடித்தனர். 

இதை தொடர்ந்து, கேரள வனத்துறையினரின் உதவியுடன் சங்கரை பிடிக்கும் முயற்சியில் இறங்கிய தமிழக வனத்துறையினர், 5 கும்கி யானைகள், இரண்டு கால்நடை மருத்துவர்கள் , 60 வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் இரவு, பகலாக கண்காணிப்பு பணியை நடத்தி வந்தனர். இதன் முடிவாக கடந்த பிப்ரவரி மாதம் காட்டு யானை சங்கரை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

அவ்வாறு பிடிக்கப்பட்ட காட்டு யானை சங்கரை முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சாதுவாக்கும் முயற்சி நடைபெற்றது. பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவேக் என்ற யானை பாகன் ஒருவர் சங்கருடன் நெருங்கிப்பழகி கோப குணத்தை மாற்றி உள்ளார். தற்போது யானை பாகன்கள் விவேக்கின் கட்டளையை மதித்து காட்டு யானை சங்கர் நடந்து கொள்ளும் விதத்தை கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.