திருத்தம் கொண்டு வந்தது கண்டிக்கதக்கது.... ஓபிஎஸ்!!!

திருத்தம் கொண்டு வந்தது கண்டிக்கதக்கது.... ஓபிஎஸ்!!!

ஈபிஎஸ் கூட்டிய செயற்குழு சட்ட விரோதமானது என்று, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் பணபலம் படைத்தவர்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் திருத்தம் கொண்டு வந்தது கண்டிக்கதக்கது என்று  ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் தங்களது அணி சார்பில் மாநாடு நடத்த உள்ளதாக கூறியுள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது சரியான தீர்ப்பை மக்கள்தான் கொடுத்தனர் என்றும், அதனால் தற்போது மக்களையே நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகம் உள்ளவரை அதிமுக இருக்கும் என்றும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே இருப்பார் எனவும் ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும், சர்வாதிகார அடிப்படையில் பொதுச்செயலாளர் என அறிவிப்பு செய்து கொண்டுள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

இதனைதொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமசந்திரன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு தங்களுக்கு தன்னம்பிக்கையை தந்துள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மாயை விலகிவிடும் எனவும் கூறியுள்ளார். மேலும், எம்ஜிஆர் , ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழா ஆண்டு என திருச்சியில் முப்பெரும் விழாவை நடத்துகிறோம் என்றும்,  இனி எடப்பாடி பழனிசாமி அணி குறித்து விமர்சிக்கவோ, பேசவோ மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தனிமனித பாதிப்பாகவே உள்ளது....!!!