நீட் தேர்வு விலக்கு குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் - மா.சுப்பிரமணியன்!

நீட் தேர்வு விலக்கு குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் - மா.சுப்பிரமணியன்!

நீட் தேர்வு விலக்கு குறித்து விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு எழுதுவதற்கு தமிழ்நாட்டில் மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 783 பேர் பதிவு செய்ததாகவும், அவர்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 மாணவர்கள் எழுதியதாகவும் கூறியுள்ளார். நீட் தேர்வின் முடிவில் 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தேர்வாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர்,  மருத்துவ கலந்தாய்வை ஒரே நேரத்தில் மத்திய - மாநில அரசுகள் நடத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீட் தேர்வு விலக்கு குறித்து விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க : ”விரைவில் சிபிஐ தன் வீட்டுக் கதவைத் தட்டி விடுமோ என்று முதலமைச்சருக்கு அச்சம்” - அண்ணாமலை விமர்சனம்!

தொடர்ந்து பேசிய அவர், செந்தில் பாலாஜி விவகாரத்தால் ஓமந்தூரார் மருத்துமனையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது எனவும் விளக்கமளித்துள்ளார்.