தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு...

தென்மேற்கு பருவமழை மற்றும் தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு...

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக.,சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும்.,

மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால்,இப்பகுதிகளுக்கு மீனவர்கள், வரும் 8 மற்றும் 9ஆம் தேதி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல், மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.