என்னது 19 மாவட்டங்களில் கனமழையா?.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

நீலகிரி, கோவை,மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

என்னது 19 மாவட்டங்களில் கனமழையா?.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை:

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

கனமழை நீடிக்கும்:

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி  மாவட்டங்களிலும், திருப்பத்தூர், சேலம், கரூர் நாமக்கல், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு:

வருகிற 30ஆம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,  தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம்,  கரூர், நாமக்கல், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை?:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.