புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட 2நாள் பயணமாக கோவை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

2 நாள் பயணமாக கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட 2நாள் பயணமாக கோவை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் செய்யும் அவர், இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்கான தனி விமானம் மூலம் கோவை சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றார். அப்போது வழியெங்கும், ஏராளமான திமுகவினர் திரண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.


இதை அடுத்து விழா மேடைக்குச் சென்ற அவர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.  

25 ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத் திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இதனை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நடைபெற உள்ள அரசு விழாவிலும் பங்கேற்கிறார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்கும் முதல்வர் கட்டிமுடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை திறந்து வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 
இதன்பிறகு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கும் முதல்வர் நாளை காலை 11 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அப்போது பின்டெக் கொள்கையை வெளியிட உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது