வெள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டினால், மிரட்டுகிறார் முதலமைச்சர்..எடப்படி பழனிசாமி குற்றச்சாட்டு

வெள்ளநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறினால், மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக மிரட்டுகிறார் முதலமைச்சர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டினால், மிரட்டுகிறார் முதலமைச்சர்..எடப்படி பழனிசாமி குற்றச்சாட்டு

வெள்ளநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறினால், மறுப்பு தெரிவிக்க திரானி இல்லாத ஸ்டாலின் மிரட்டுகிறார்.

மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் விசாரணை கமிஷன் என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி........

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டத்தை தந்ததால்தான், அதனை திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது என்றும்  கூறினார்.........

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், 

திமுக அரசு பருவமழைக்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வார சரியான திட்டமிடாததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர் என்றார். நாளைய தினம் நானும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்டா பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிவித்த அவர்,  வெள்ளம் பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டால் நாங்களும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்  என கூறினார். 

வெள்ளநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறினால், மறுப்பு தெரிவிக்க திரானி இல்லாத ஸ்டாலின், மிரட்டுகிறார் என்றும் மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் விசாரணை கமிஷன் என்று கூறுகிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என கூறிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டத்தை தந்ததால்தான், தற்போது அதனை திமுக அரசு திறந்து வைத்து வருகிறது. திமுக அரசு புதிய திட்டங்கள் ஏதும் தரவில்லை என்றும் கூறினார்.