டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பயணம்!

வருகிற 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கபட உள்ள நிலையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.

டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பயணம்!

5 நாள் பயணமாக டெல்டா மாவட்டங்களுக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். வரும் 11, 12 ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்துக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சா், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் கலைஞா் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளாா். முதலமைச்சா் வரும் 11-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் கலைஞரின் சிலையை திறந்து வைத்து ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவுள்ளார். மேலும், சுமாா் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட உள்ளாா். தொடர்ந்து 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளாா்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஜூன் 5ல் ஆய்வு மேற்கொள்ள விருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது ஜூன் 9 ஆம் தேதி ஆய்வு செய்கிறார். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் ஆய்வு செய்கிறார்.

இதையும் படிக்க:”பட்டியலினத்தவர் என்பதால் துன்புறுத்தல்”ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்...!