கணவன் மனைவி ஈகோ-வை கைவிடாவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்... நீதிபதி

கணவன் மனைவி இருவரும் ஈகோவையும், சகிப்புத்தன்மையையும் காலணியாக கருதி வீட்டுக்கு வெளியே விட வேண்டும் இல்லை என்றால் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் என  சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கணவன் மனைவி ஈகோ-வை கைவிடாவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்... நீதிபதி

சேலத்தில் கால்நடை மருத்துவராக சசிகுமார் என்பவர் பணியாற்றி வந்தார்.இவருக்கு எதிராக அவரது மனைவி குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இதனையடுத்து  தன்னுடைய மனைவிக்கு விகாரத்து வழங்கிவிட்டதால்,தன் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன்,திருமணம் என்பது ஒப்பந்தமல்ல ,அது ஒரு சடங்கு என்பதை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.