தமிழ்நாட்டில் 40 அரசுப் பள்ளிகள் மூடல்.. இது தான் காரணமா?

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், சேர்க்கை நடைபெறாத 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 40 அரசுப் பள்ளிகள் மூடல்.. இது தான் காரணமா?

தமிழகம் முழுவதும் 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 28  லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்தரத்தை உயர்த்தி அரசு நடவடிக்கை எடுத்தாலும்,  ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 40 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும், 22 தொடக்கப்பள்ளிகள், 18 உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மூடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நீலகிரி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் தலா 5 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் திண்டுக்கல், தேவகோட்டை மாவட்டங்களில் தலா 4 பள்ளிகளும், லால்குடி, வேலூர், திருவாரூர் பகுதிகளில் தலா ஒரு 2 பள்ளிகளும் நாட்றாம்பள்ளி, தட்டால கொளத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட 11 இடங்களில் தலா ஒரு பள்ளிகளும் மூடு விழா கண்டுள்ளன. மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருந்ததாலேயே 40 பள்ளிகள் மூடப்பட்டதாகவும், மேலும் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் படித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.