அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல் :  3 பேருக்கு கத்திக்குத்து ; ஒருவர் கவலைக்கிடம் !!

கோவை ஆலாந்துறை 11 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேருக்கு கத்திக்குத்து.

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல் :  3 பேருக்கு கத்திக்குத்து ; ஒருவர் கவலைக்கிடம் !!

கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களில் 2 பிரிவினர் அப்பள்ளியின் அருகே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர், மூன்று பள்ளி மாணவர்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு மாணவர் மட்டும் தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதியில் குத்தியதால் மிகவும் மோசமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட மாணவர் ஏற்கனவே தனது தாய்மாமனை கத்தியால் குத்திய வழக்கில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் பள்ளி மாணவர்களிடையே ஒருவரை ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.