நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு...மாணவ மாணவிகள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் பேட்டி!

நாடு முழுவதும்  கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு...மாணவ மாணவிகள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் பேட்டி!

நாடு முழுவதும்  கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் மாணவ மாணவிகள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோவில் குளத்தை ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதுமே சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கூறியவர், தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 40 ஆக அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் தற்போது பரவும் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.  குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவை இல்லை என்று கூறினார்.

இதையும் படிக்க : ஈ.பி. எஸ். உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு...தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க 104 என்ற உளவியல் ஆலோசனை மையத்தை அணுகலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்திப் சிங் பேடி  உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.