தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு...

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு...

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களுக்கு இடையிலான தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கும் என்றும் பள்ளி, கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களும், தட்டச்சு-சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்களும் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் இயங்கலாம் என்றும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் ஏற்கனவே அரசு அறிவித்திருந்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே இயங்குவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும்.,நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைத்து வீடு வீடாக பரிசோதனையை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.