கனிமவளங்களைத் தொடர்ந்து...! கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் பொருட்கள்....!

கனிமவளங்களைத் தொடர்ந்து...! கேரளாவுக்கு  கடத்தப்படும் ரேஷன் பொருட்கள்....!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இரவிபுதூர்கடை பகுதி வழியாக கேரளாவிற்கு கடந்த முன்ற 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல், ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி நடத்திய சோதனையில் சிக்கியது.

தென்மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் கேரளாவிற்கு தொடர்ந்து கடத்த பட்டு வரும் நிலையில் இதனை தடுக்க மாவட்ட காவல் துறை மற்றும் வருவாய் துறை தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் மார்த்தாண்டம் அருகே இரவிபுதூர் கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனர். 

இதையும் படிக்க     } அனைத்து மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பதே முதலமைச்சரின் எண்ணம்... !

ஆனால் கார் நிற்காமல் சென்ற நிலையில் சுமார் இரண்டு கி.மி. தூரம் விரட்டி பின் தொடர்ந்து சென்று மார்த்தாண்டம் அருகே வைத்து மடக்கி பிடித்தனர், இதில் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் அரிசி மற்றும் சொகுசு காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க    }  திமுக அரசில் மதுவுக்கு முக்கியத்துவம், சட்டம் சீர்குலைந்து வருகிறது - ஜி.கே.வாசன்