ஜெயலலிதா நினைவிடம் செல்வது வீண் முயற்சி... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...

சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடம் செல்வது வீண் முயற்சி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம் செல்வது வீண் முயற்சி... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுகவின் பொன்விழாவையொட்டி வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பில் பொன்விழா கொண்டாடுவது குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கும் முன் செய்தியாளர்களை சந்தித்தமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேரை கைது செய்துள்ளனர். கடலில் எல்லை என்பதே கிடையாது காற்றின் வேகத்தில் தான் செல்வார்கள். இதுபோன்ற கைது நடவடிக்கை களையும், சித்திரவதைகளையும் முற்றிலும் நிறுத்த வேண்டும்.

உடனடியாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.இருநாட்டு மீனவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்வது வீண் முயற்சி எனவும் அதனால் கட்சியில் எவ்வித பிளவையும் ஏற்படுத்தமுடியாது என்றார்.பின்னர் சசிகலவை குறிப்பிட்டு, அம்மா அம்மா தான் மற்றவரெல்லாம் சும்மா என்றார். அம்மா என்ற  வார்த்தையை சசிகலா பயன்படுத்த கூடாது என விமர்சித்தார்.

தமிழகத்தில் இரண்டு தீய சக்திகள் உள்ளது ஒன்று திமுக மற்றொன்று சசிகலா. எந்த தீய சக்தியாலும் அதிமுக தொண்டர்களை பிரிக்க முடியாது என்றார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகாவிற்கு பின்னடைவு இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக ஜனநாயக முறையில் நடைபெற்று இருந்தால் வெற்றி தோல்வி சமமாக இருந்திருக்கும் என்ற அவர் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக கட்சித் தொண்டர்களை வைத்து  திமுக தேர்தல் நடத்தி இருக்கலாம் என்றார்.உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு கிடைத்த வெற்றி அதர்மத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் கூறினார்.

எந்தவித சட்ட உரிமையும் இல்லாமல் அதிமுக கொடியையும் பொதுச் செயலாளர் என்ற பெயரையும் சசிகலா பயன்படுத்தி வருகிறார். சசிகலாவை எதிர்த்து போராட்டம் செய்து பெரிய ஆளாக ஆக்க விரும்பவில்லை என்றார்.