செந்தில் பாலாஜி விவகாரம்: "ஆளுநர் முடிவு சட்டபடி தவறு; தார்மீகப் படி சரி" அன்புமணி விளக்கம்!

செந்தில் பாலாஜி விவகாரம்: "ஆளுநர் முடிவு சட்டபடி தவறு; தார்மீகப் படி சரி" அன்புமணி விளக்கம்!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக ஆளுநர் சட்டத்தின் அடிப்படையில் தவறான முடிவை எடுத்ததாகவும், தார்மீக அடிப்படையில் சரியான முடிவை எடுத்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே கடந்த மாதம் 12ஆம் தேதி வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளி என்கின்ற காளிதாஸ் என்பவரை படுகொலை செய்தனர். இந்நிலையில் காளிதாஸ் குடும்பத்தினரை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்ட தலைவர் காளிதாஸ் கொலை வழக்கில் இன்னும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஏதோ பெயரளவில் ஒரு சில குற்றவாளிகளை கைது செய்து உள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் என்ன? எனக் கண்டறிந்து இந்த கொலைகள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணமே திமுக அரசு தான்.  இந்த துறை திடீரென்று நஷ்டத்தில் இயங்கவில்லை கடந்த 10 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. ஆகவே போக்குவரத்து துறை 50,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறுகின்ற சூழலில் அவர்களுக்கு பி எஃப் மற்றும் கிராஜுவிட்டி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்திலும் முன் உதாரணமான துறையாக இருந்த போக்குவரத்துத் துறை இன்று மோசமான நிலையை அடைந்துள்ளது. மேலும், முதலமைச்சர் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஊழல் விவகாரம் குறித்து பேசியபோது சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் அது தவறு ஆளுநர் எடுத்த முடிவு தவறு ஆனால், தார்மீக அடிப்படையில் பார்த்தால் அது சரி என்று கூறினார்.

இதையும் படிக்க:'டெட்ரா பேக்' மூலம் மது விற்பனை செய்ய நடவடிக்கை... அமைச்சர் முத்துசாமி தகவல்!