திருச்சி சிவாவிடம் சமாதானம் செய்தாரா அமைச்சர் கே. என். நேரு....?!

திருச்சி சிவாவிடம் சமாதானம் செய்தாரா அமைச்சர் கே. என். நேரு....?!

திமுக எம்.பி திருச்சி சிவாவின் இல்லம் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாக அமைச்சர் கே. என் நேரு தெரிவித்துள்ளார்.

சந்திப்பு:

அமைச்சர் கே. என். நேரு பங்கேற்ற பூங்கா திறப்பு விழாவில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அதனைக் கண்டித்து அமைச்சர் கே. என் நேருவின் ஆதரவாளர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, திருச்சி சிவா எம்பியின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தும் தாக்குதல் நடத்தினர்.

மேலும் தெரிந்துகொள்க:   திமுகவிலும் உட்கட்சி பூசலா?அமைச்சர் கே. என்.நேரு, எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல்!

இனி நடப்பவைகள்:

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் கே. என்.நேரு, திருச்சி எஸ்பிஐ காலனியில் உள்ள சிவா இல்லத்திற்கு சென்று வருத்தம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.  அப்போது பேசிய அமைச்சர் கே. என்.நேரு, மனதில் உள்ள கருத்துக்களைப் இருவரும் பகிர்ந்து கொண்டதாகவும், நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என கூறினார். 

வளர்ச்சிக்காகவே:

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, தானும், அமைச்சர் நேருவும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே அவரவர் தளத்தில் பணியாற்றுகிறோம் என கூறினார்.

இதையும் படிக்க:   கொட்டி தீர்த்த மழை... மகிழ்ச்சியில் மக்கள்...!!!