நீலகிரி, கோவை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

நீலகிரி, கோவை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

நீலகிரி, கோவை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று  நீலகிரி, கோவை, திருப்பூர் உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

நாளை சேலம், நாமக்கல்,  திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,  அன்றைய தினம்  20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை  பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னையில் மழை நிலவரம்
 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை மீனர்வகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.