தமிழகத்தில் நீடிக்கும் கனமழை... 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...

கனமழை காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீடிக்கும் கனமழை... 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...

குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கனமழை நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.