தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும்... 2000 -க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு....! - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும்... 2000 -க்கும் மேற்பட்ட  குழந்தை தொழிலாளர்கள் மீட்பு....! -  அமைச்சர் அன்பில் மகேஷ்


சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் சென்டனரி பள்ளியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500 இளம் கீபோர்டு இசைக் கலைஞர்கள் இசைக்கும் நிகழ்ச்சியானது நடைப்பெற்றது. 

இந்நிகச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் எஸ்.ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு ஆசிய புக் ஆப் ரெக்கார்டு சாதனைக்காக இன்று நிகழ்த்தப்பட்டது. முன்னதாக 2017 ல் 440 குழந்தைகள் கலந்து கொண்டு சாதனையை படைத்துள்ளனர். இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உலக சாதனைக்காக அனுப்பட உள்ளது.

இதில் பேசிய மேடையில் அமைச்சர் அன்பில் மகேஷ், எங்காவது குழந்தைகள் வேலை பார்த்துவந்தால் உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார்.

Child Labor in India - Valmiki Foundation

இதையும் படிக்க     ] 

தொடடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறைகளுடன் பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து, விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்வுகளுக்கு மட்டுமல்லாமல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாகவும் 14417 மற்றும் 1098 எண்களுக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2021 - 22 ம் ஆண்டு மட்டும் 2586 குழந்தை தொழிலாளர்கள் மீடுகப்பட்டுள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

இதையும் படிக்க     ]