"மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழும் இந்தியா" சுப்ரியா சாஹூ பெருமிதம்!

"மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழும் இந்தியா" சுப்ரியா சாஹூ பெருமிதம்!

மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழ்வது இந்தியாவில் மட்டும் தான் என சமூக வலைதளதத்தில் வனத்துறை முதன்மைச் செயலாளர் பதிவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் உணவு தேடி விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வந்த விவசாய நிலங்களிலும் முகாமிடுவது வாடிக்கையாகிவிட்டது. 

இந்நிலையில் கூடலூர் அருகே பத்திற்கும் மேற்பட்ட யானைகள் சாலையை கடந்து அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்க்குள்  சென்றுள்ளன. இந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இக்காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தமிழ்நாடு வனத்துறை முதன்மை செயலாளர் சுப்பிரியா சாகு "மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழ்வது இந்தியாவில் மட்டும் தான்" என கருத்து தெரிவித்துள்ளார்.