ஜாதகம் பார்பதற்கு பதிலாக, தடுப்பூசி போடப் பட்டிருக்கிறதா என பாருங்கள்...! எம்.எல்.ஏ எழிலன் கருத்து...!!

ஜாதகம் பார்பதற்கு பதிலாக, தடுப்பூசி போடப் பட்டிருக்கிறதா என பாருங்கள்...! எம்.எல்.ஏ எழிலன் கருத்து...!!

ஜாதகம் பார்பதற்கு பதிலாக பெண்களுக்கு தடுப்பூசி போடப் பட்டிருக்கிறதா என பாருங்கள் என ஆயிரம் விளக்கு சட்ட மன்ற உறுப்பினர் எழிலன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர் ராதா பாலசந்தர் எழுதிய மரம் ஏறும் மீன்,ஆட்டிசம் ஒரு பார்வை, A guide to parents ஆகிய 3 ஆட்டிசம் குறித்த புத்தகங்களின் முதல் பிரதியை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் வெளியிட்டார்.

சென்னை இராயப்பேட்டையில் உள்ள மீயூசிக் அகடாமியில் இந்த நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய மருத்துவர் ராதா பாலசந்தர், ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடு தான் அதனை முதலிலே கண்டறிந்தால் அதனை சரி செய்துவிடலாம என்றார். மரம் ஏறும் மீன் என்ற புத்தத்தை என புத்தகத்திற்கு தலைப்பிட்டுள்ளேன். மீன்கள் மரம் ஏறுவது கிடையாது. ஆனால் அதற்கான பயிற்சி அளித்தால் மரம் ஏறும். அதற்கான புரிதல் அனைவருக்கும் வேண்டும் என்பதே அர்த்தம் என்று கூறினார். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு 20 ஆண்டுகளாக நான் கண்ட குறிப்புகள், கற்ற விஷயங்கள் என அனைத்தும் நான் எழுதிய இந்த 3 புத்தகத்திலும் உள்ளது எனக் கூறிய அவர் இந்த புத்தம் அனைவருக்கும் எளிதில் புரியும் படி எழுதியிருப்பதாக மருத்துவர் ராதா பாலசந்தர் கூறினார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், மக்களுக்கு ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லை. நமது மக்களிடையே ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை கண்டறிவது குறித்து போதுமான விழிப்புணர்வும் இல்லை. ஆனால் இந்த நூல் அப்படியான விழிப்புணர்வை அறிவியல் ரீதியாக வளர்க்கும் விதமாக இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து, திருமணத்திற்காக ஜாதகம் பார்பதற்கு பதிலாக பெண்களுக்கு தடுப்பூசி போடப் பட்டிருக்கிறதா என்று பார்த்தால் குழந்தைகளை இது போன்ற நோயிலிருந்து காக்க முடியும். மொழிப் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் பேசி பெருமைப்படும் போது நாம் அறிவியலையும் நடைமுறைக்கு கொண்டு வந்து வாழ்வியலில் பின்பற்றவேண்டும்  என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?