மதனின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

யூடியூபர் மதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது முன் ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மதனின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

யூடியூபர் மதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது முன் ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தனது டாக்ஸிக்மதன் 18 பிளஸ் ஆபாச சேனலில் பேசிவந்தவர் மதன். இவர் தற்போது குடும்பத்துடன் சிக்கியுள்ளார். மதனின் மனைவி கைதாகியுள்ள நிலையில் மதன்குமார் மாணிக்கத்தின் உல்லாச வாழ்க்கை அம்பலமாகியுள்ளது. கோடியில் புரண்ட மதன், தடைசெய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் போது, அடாவடி ஆபாசமாக யூடியூப் பக்கத்தில் பேசிவதுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தான் யார் என்ற அடையாளத்தை வெளிகாட்டாமல் ஆரவாரமாக ஆபாசமாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தார். இவரது பேச்சால் மூளைசலவை செய்யப்பட்ட சிலர் கண்மூடித்தனமாக இவரது ரசிகர்களாகினர். இதுதொடர்பாக சென்னை காவல்துறைக்கு தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து அவர் தலைமறைவானார். இதையடுத்து மதன் நடத்திய சேனலின் நிர்வாகியாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்த நிலையில் இன்று தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனையும் அதிரடியாக கைது செய்தனர்.

முன்னதாக முன் ஜாமின் கேட்டு மதன் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யூடியூபர் மதனின் பேச்சுகள் அடங்கிய சிடியை தாக்கல் செய்த காவல்துறை, இன்று காலை கைது செய்யப்பட்டுவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது. தற்போது  மதன் கைது செய்யப்பட்டதால், முன் ஜாமீன் மனு மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என மதன் வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். பின்னர் இரு தரப்பு விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.