ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்...!!

ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்...!!

ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் , ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  அம்பாசமுத்திரம்  ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி வன்முறையில் ஈடுபடுவதாக வெளியான தகவலை அடுத்து அவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் மாநில மனித உரிமை ஆணையம் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ் அசோசியேஷன் தலைவர் ஆபாஷ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக  ஊடகங்களில் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடுவதால் ஆதாரங்கள், சாட்சியங்கள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.  மேலும் செய்திகள் பரப்பபடுவதால் விசாரணை தடைப்படுவதாகவும், விசாரணை முடிந்து நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரத்தை ஊடகத்தில் உள்நோக்கத்துடன் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள் சங்க தலைவரும் இயக்குனருமான ஆபாஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  அதிகரிக்கும் கொரோனா... அறிவுரை வழங்கிய மாநகராட்சி!!