அனைத்து மாநில முதலமைசர்கள் கூட்டம்... தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை...

மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அனைத்து மாநில முதலமைசர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில முதலமைசர்கள் கூட்டம்... தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை...

பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்த இன்று மாலை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலமாக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா முன்னோடியாக உள்ளது.

அதனை மேலும் வலுப்படுத்தக்கூடிய விதமாக முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை எளிமையாக்குவது குறித்தும், நீர் ஆதார பயன்பாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரியில் பேரிடர் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்யவுள்ளதால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் செயலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.