கள்ளக்குறிச்சியில் சுரண்டப்படும் கனிம வளங்கள்...! நடவடிக்கை எடுக்குமா அரசு..?

கள்ளக்குறிச்சியில் சுரண்டப்படும்  கனிம வளங்கள்...!   நடவடிக்கை எடுக்குமா அரசு..?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூர் கிராம எல்லை பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக திருட்டுத்தனமாக வளங்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்க துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு  ரகசிய தகவல்க வந்தது.

 அதன் அடிப்படையில் , அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது,  TN 46 K 2527 மற்றும் TN 67 H 4969  இரண்டு டிப்பர்லாரிகளில் கூழாங்கல் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து, உடனே இரண்டு டிப்பர்லாரிகளையும் பறிமுதல் செய்தனர். அப்போது லாரி ஓட்டுநர்கள் அதிகாரியை கண்டதும் தப்பியோடி விட்டனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரிகளையும்உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் மனு அளிக்கப்பட்டது.  அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க    } அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்,, செவிலியர்கள் பாற்றாக்குறை... ! பலியான கர்ப்பிணி பெண்..! .

குறிப்பாக இந்த இரண்டு லாரியில் ஒரு லாரியானது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூழாங்கல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு  இன்று தான் நீதிமன்றத்தில் ரிலீஸ் ஆர்டர் வாங்கிக் கொண்டு காலை 11:30 மணிக்கு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சென்ற லாரி மீண்டும் பறிமுதல் செய்து செய்யப்பட்டது என குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க    }  திருச்செந்தூரில் வசூல் வேட்டை செய்யும் அதிகாரிகள் ..! பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு,...!