புத்துயிர் பெரும் திருத்தணி ரயில் நிலையம்... காணொளி வாயிலாக பணிகளை தொடங்கி வைத்த பிரதமர்!!

புத்துயிர் பெரும் திருத்தணி ரயில் நிலையம்... காணொளி வாயிலாக பணிகளை தொடங்கி வைத்த பிரதமர்!!

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருத்தணி ரயில் நிலையம் விரிவாக்கம் பணியை தொடங்கி வைத்தார். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக விளங்குகிறது. திருத்தணி முருகப் பெருமானை தரிசிக்க தினந்தோறும் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதே போல் ஆந்திராவில் இருந்து தமிழகத்தை சந்திக்கும் திருத்தணி ரயில் நிலையம் மிகப்பெரிய ரயில் நிலையமாக உள்ளது.

இந்த ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய திருத்தணி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை அடுத்து மத்திய அரசு அம்ரத் பாரத் ரயில் நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ், ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் திருத்தணி ரயில் நிலையத்திற்கு ரயில்வே பிளாட்பார்ம் விரிவாக்கம், ரயில் நிலைய அதி நவீன முறையில் தானியங்கி படிக்கட்டுகள் போன்றவை அமைக்கப்படும்.

இந்நிலையில், இந்த பணிகள் திட்டத்திற்காக, திருத்தணி ரயில் நிலையத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருத்தணி ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு கல்வெட்டினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ரயில் நிலைய ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பல பொது மக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க || ஏலக்காய் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!!