என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்க காலதாமதம் ஏன்? ஆளுநர் ரவி கேள்வி!

என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்க காலதாமதம் ஏன்? ஆளுநர் ரவி கேள்வி!

கோவை தீவிரவாத தாக்குதல்களுக்கு பெயர் போன இடமாக மாறி வருகிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதல்:

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  ஆளுநர் ஆர்.என்.ரவி,  கோவையில்  தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக தெரிவித்தார்.   அதிக அளவிலான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதன்  மூலம்  ஒரு மிகப்பெரிய சதி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார், 

இதையும் படிக்க: கோவை வழக்கில் திடீர் திருப்பம்...6 வது நபர் அதிரடி கைது...நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

சமீபத்தில் அபாயகரமான தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டதை தொடர்ந்து ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன எனவும் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதல்களுக்கு பெயர் போன இடமாக மாறி வருகிறது:

கோவை தீவிரவாத தாக்குதல்களுக்கு பெயர் போன இடமாக மாறி வருகிறது எனவும், தீவிரவாத செயல்களை கண்காணிக்க  தவறி விட்டோம் எனவும் தெரிவித்தார்.

ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு கேள்வி:

கார் சிலிண்டர்வெடிப்பு  சம்பவத்தைப் பொறுத்தவரை தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாக கூறிய ஆளுநர் ரவி,  இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க  காலதாமதம்  செய்தது ஏன்?  என தமிழக அரசுக்கு  கேள்வி எழுப்பினார் .

 
---