'நம்ம ஊரு சூப்பர்' திட்டம்...! தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 'நம்ம ஊரு சூப்பர்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

'நம்ம ஊரு சூப்பர்' திட்டம்...! தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார். மேலும், அங்கு உள்ள குப்பைகளை மாவட்ட ஆட்சியர், துப்புரவு பணியாளர்களுடன் தூய்மை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து நமது கிராமங்களை தூய்மையாக வைத்து கொள்ளுவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ஆலம்பூண்டி கிராமத்தில் ' இல்லம் தேடி கல்வி ' திட்டத்தின் கீழ் நடைப்பெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். அதோடு தன் ஆர்வலர்களிடம்,  தங்களுக்கு இந்த ஆர்வம் எப்படி வந்தது என கேட்டறிந்து அவர்களை பாராட்டினார். மேலும் அந்த பகுதியில் நடைப்பெற்ற தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் மகாத்மா 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். மேலும், பணியின் விவரங்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பார்வையிட்டு, முறையாக 100 நாள் வேலைத்திட்டம் வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.